அரசாங்கத்தால் மானியம் பெறும் குழந்தைகள் காப்பகங்களில் (Daycare Centres/CPEs) பணிபுரியும் ஊழியர்கள், மதச் சின்னங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு கியூபெக் அரசாங்கம் முனைந்துள்ளது.
கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை மேலும் இறுக்கமாக்கும் நோக்கிலேயே, இந்த சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பில் 21 (Bill 21) சட்டத்தின் நோக்கத்தைப் பலப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என, கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பின்மை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரொபேர்ஜ் (Jean-François Roberge) தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு ஒரு “மதச்சார்பற்ற சூழலை” வழங்குவது மிக முக்கியமானது என்றும், இந்த முடிவுக்கு கியூபெக் மக்கள் மத்தியில் பரவலான ஒருமித்த கருத்து (broad consensus) இருப்பதாகவும் அமைச்சர் ரொபேர்ஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
