கனடாவின் மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளது. இன்றைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வங்கி வட்டி வீதம் 2.75 வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான தொடர்ச்சியான வர்த்தகப் போர் கனேடிய பொருளாதாரத்தை பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கனடா வங்கி அதன் கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 2.75 சதவீதமாக புதன்கிழமை அறிவித்தது.
அன்மைய நாட்களாக தனது மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் இந்த வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்படுவதாக கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
கனடா எந்த வகையான பணவீக்க தாக்கங்களை எதிர்கொள்கிறது என்று ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலத்த மேக்லெம் , “அமெரிக்க வர்த்தகக் கொள்கையின் பரவலான நிச்சயமற்ற தன்மை மற்றும் கணிக்க முடியாத தன்மையைக் கருத்தில் கொண்டு, அதைப் பற்றி என்னால் ஒரு சரியான பதிலை முன்வைக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பணவீக்கத்திற்கு பல காரணிகள் பங்களிக்கக்கூடும் என்று கூறினார். பலவீனமான கனேடிய டாலர் இறக்குமதியாளர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது, ஏனெனில் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் அதிக விலை கொண்டதாக இருக்கும்; அமெரிக்காவால் கனடா மீது விதிக்கப்படும் பழிவாங்கும் வரிகளும் செலவுகளை அதிகரிக்கும் நிலையுள்ளது; மேலும் நிச்சயமற்ற தன்மையே செலவுகளை அதிகரிக்கிறது, ஏனெனில் வணிகங்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள புதிய விநியோகத்தர்களையும் புதிய சந்தைகளையும் தேடுகின்றன.