கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் புதிய பிரதமரும் இன்று தேர்வாகின்றார்.
லிபரல் கட்சியின் தலைமை பதவியை வெற்றி கொள்வதன் மூலம் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படும் முயற்சியில்
மார்க் கார்னி, கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கரினா கோல்ட், பிராங்க் பேலிஸ் ஆகியோர் உள்ளனர்.
லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இன்று அறிவிக்கப்படவுள்ள வெற்றியாளர், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக லிபரல் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்பார்.
பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில்
பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.