மொன்றியலின் வடகிழக்கில் உள்ள ஷாவினிகனில் மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றிலிருந்து 15 வயது சிறுமி விழுந்து உயிரிழந்ததாக கியூபெக் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருக்கும் முன்னாள் பெல்கோ தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி தொழிற்சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்ததை அடுத்து, நேற்று இரவு 8:30 மணியளவில் அவசர சேவைகளுக்கு சிறுமியின் உறவினர்களில் தகவல் வழங்கப்பட்டுள்ளது
இரண்டு இளைஞர்கள் தொழிற்சாலை தளத்தில் நடந்து சென்று உச்சியில் ஏறியபோது, சிறுமி கான்கிரீட் மற்றும் உலோக கட்டமைப்பில் காணப்படும் பள்ளத்திற்குள் விழுந்து உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4:40 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குறித்த சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
என்ன காரணத்திற்காக மூடப்பட்ட தொழிற்சாலைக்குள் அவர்கள் போனார்கள் என்பது பற்றி தகவல் வெளியிடப்படவில்லை.