சமீபத்திய பிரச்சார இடைவேளையின் போது பொதுமக்களிடமிருந்து ‘மறைந்து’ கொண்டதாக பிரதமர் மார்க் கார்னி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28 ம் திகதி இடம்பெறவிருக்கும் தேர்தலில் மார்க் கார்னி முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில் மீண்டும் பிரச்சாரப் பாதையைத் தவிர்த்துவிட்டதாக இரண்டு கூட்டாட்சி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரச்சாரத்தின் முதல் மூன்று வாரங்களை கடந்து செல்வதன் மூலம் தனது ஆரம்ப வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ள லிபரல் தலைவர் முயற்சிப்பதாக பிளாக் கியூபெக் கட்சி தலைவர் குற்றம் சாட்டினார்.