கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் Liberal கட்சி தலைவர் மார்க் கார்னி மற்றும் Conservative தலைவர் பியர் போய்லிவ்ரே ஆகியோர் ஒரே மாதிரியான வலுவான எரிசக்தி மேம்பாட்டுத் திட்டங்களை தேர்தல் பிரச்சாரங்களில் முன்வைத்துள்ளார்கள் ,
அவை ஒழுங்குமுறை செயல்முறைகளை விரைவுபடுத்தும் எனவும் மற்றும் இயற்கை வளத் திட்டங்களை உருவாக்க எரிசக்தி வழித்தடங்களை உருவாக்கும் என நம்பபடுகிறது.
ஆனால் சில தொழில் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் , இரு தலைவர்களும் எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகையில், அவர்களின் திட்டங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“பெரிய திட்டங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்புகளை மேம்படுத்துவது நிகழ்ச்சி நிரலில் இருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் இரண்டு அணுகுமுறைகளும் … அது உண்மையில் நடைமுறையில் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து எனக்கு சில பெரிய கேள்விகளை எழுப்பிஇருந்தன ,” என ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் நேர்மறை எரிசக்தி திட்டத்தின் தலைவர் மோனிகா கேட்டிங்கர் தெரிவித்துள்ளார்.