ஒன்டாரியோவின் இங்கர்சோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.
இதனால் 500 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும், இந்த தொழிற்சாலை மின்சாரத்தால் இயங்கும் விநியோக டிரக்குகளை உற்பத்தி செய்கிறது.
ஆனால் தற்போது இந்த டிரக்குகளுக்கு போதிய தேவை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இலையுதிர்காலத்தில் தொழிற்சாலையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது என, இங்கர்சோல் நகர மேயர் பிரையன் பெட்ரி தெரிவித்துள்ளார்.
எனினும் அது குறைவான ஊழியர்களுடன் மட்டுமே திறக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலையில் வேறு ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.