Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இங்கிலாந்தின் அரச நெறிமுறைகளை மீறியதாக இணையவாசிகள் கண்டனம்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்கிலாந்தின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

அரச விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதியில், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், வின்சோர் கோட்டைப் பகுதியில் இராஜ ஊர்வலம் முடிவடைந்த பின்னர், அரச அணிவகுப்பை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, மன்னர் சார்லஸை கடந்து சில அடிகள் முன்னதாக ட்ரம்ப் நடந்து செல்லும் காணொளி இணையத்தில் வெளியானது.

இங்கிலாந்து மன்னருக்கு முன் அவரது விருந்தினர் ஒருவர் நடந்து செல்வது, அந்நாட்டு அரச நெறிமுறைகளை மீறும் செயல் எனக் கூறப்படும் நிலையில், ட்ரம்ப் அவ்வாறு நடந்து சென்றது அவமரியாதையான ஒன்று என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அணிவகுப்பை பார்வையிட செல்லும் மன்னர் சார்லஸ், ட்ரம்ப்பை முன்னால் செல்ல செய்கை செய்வது போன்ற காணொளியும் வெளியாகியுள்ளது. இதுபோன்ற, அணிவகுப்புக்களை விருந்தினராக வந்திருக்கும் மற்ற நாட்டு தலைவர்கள் முன்னால் சென்று பார்வையிடுவது மரியாதை நிமித்தமான வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், இங்கிலாந்தின் பட்டத்து இளவரசர் வில்லியம்ஸ் உடனான சந்திப்பின்போது அவருடன் கைகுலுக்கிய ட்ரம்ப், மற்றொரு கையால் இளவரசரின் தோளில் தட்டியதாகவும் இதுவும் அரச நெறிமுறை மீறல் என பரவலாகப் பேசப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 7வது இடம்!
அடுத்த செய்தி துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

உயிருள்ள எதையும் ஊடகங்களில் காட்டக்கூடாது- தாலிபான் அதிரடி உத்தரவு

அக்டோபர் 16, 2024
உலகம்

அசாம் மாநிலத்தில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவு!

செப்டம்பர் 14, 2025
உலகம்

விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்றவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை!

செப்டம்பர் 3, 2025
உலகம்

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை.

டிசம்பர் 2, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?