கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Anita Anand மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் S. Jaishankar ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லத் தயாராக இருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், பொருளாதாரம், தூதரக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது, கனடாவின் அமெரிக்காவுக்கு அப்பாற்பட்ட வர்த்தக மற்றும் சர்வதேச கூட்டாண்மை முயற்சிகளிலும் முக்கிய இடம் பெறுகிறது.


