தேசியப் பாதுகாப்புத் துறை (Department of National Defence – DND), ஒட்டாவா நகரத்தின் மத்தியில், குறிப்பாக நாடாளுமன்றம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு அருகில், ட்ரோன்களைக் கண்டறியும் தொழில்நுட்பங்களின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
‘ஆளில்லா வான்வழி அமைப்பு சாண்ட்பாக்ஸ் 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சோதனையின் முதன்மை நோக்கம் ஆனது, கூட்டங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு பகுதிகளை அச்சுறுத்தும் சிறிய ட்ரோன்களைக் கண்டறிவதாகும்.
மிகவும் நெருக்கமான நகரச் சூழலில் (Urban Environment) இத்தகையதொரு சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
இதற்கு முன்பு, இத்தகைய சோதனைகள் அல்பர்ட்டாவில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


