ஒன்டாரியோ மாகாணத்தின் போர்ட் ஹோப் (Port Hope) நகரில், தனது முன்னாள் மாணவர்களான மூன்று சிறுவர்களுடன் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியை கெல்லி-ஆன் ஜென்னிங்ஸ் (Kelly-Anne Jennings – 41)-க்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கவார்தா லேக்ஸ் (Kawartha Lakes) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்னாப்சாட் (Snapchat) சமூக ஊடகத் தளம் மூலமாகவே இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மூன்று சிறுவர்களுடன் தொடர்புடைய ஆறு குற்றச்சாட்டுகளை ஜென்னிங்ஸ் ஒப்புக்கொண்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜென்னிங்ஸ், தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில், “ஒரு பெரியவரின் திருப்திக்காக ஒரு குழந்தையை பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவதால் ஏற்படும் தாக்கம் மிகக் கடுமையானது” என்று தெரிவித்துள்ளார்.
