அமெரிக்கப் பொருட்களுக்கான சில வரிகளை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக, பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் தொழில்துறைகளுக்கு உதவுவதற்காகவே, இந்த வரிநீக்கம் குறித்து பரிசீலிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தகப் போரானது இரு நாடுகளுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனேடிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த உலகளாவிய அவதானம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய Softwood Lumber தொழில்துறையினருக்கு உதவும் வகையில், 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய உதவித் திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனேடிய Softwood Lumber தொழில்துறை தற்போது அமெரிக்க சந்தையைச் சார்ந்திருப்பதாகவும், அதிலிருந்து அந்த தொழில்துறையை விடுவிப்பதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
