உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி, மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், சாட்சி விசாரணைகள் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
