டொராண்டோ நகரில் நடைபெறும் போராட்டங்களின் போது வன்முறை, மிரட்டல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் மீது “உடனடி மற்றும் கடுமையான” நடவடிக்கை எடுக்குமாறு ஒன்டாரியோ மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாண பாதுகாப்புத் துறை அமைச்சர் (Solicitor General) மைக்கேல் கெர்ஸ்னர், டொராண்டோ பொலீஸ் தலைமைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
டொராண்டோ நகரில் நிலவும் போராட்டச் சூழல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், போலீசாரின் தற்போதைய மெத்தனப் போக்கு “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக டொராண்டோவின் ஈட்டன் சென்டர் (Eaton Centre) மற்றும் யூத மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களைக் குறிப்பிட்டு அமைச்சர் சில முக்கிய கருத்துகளை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் பொதுமக்களை மிரட்டும் தொனியில் நடப்பதாகவும், இது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் ஒன்டாரியோ மாகாண பாதுகாப்புத் துறை அமைச்சர் (Solicitor General) மைக்கேல் கெர்ஸ்னர் கூறியுள்ளார்.


