டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்விக்காகப் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த 10-ஆம் திகதி, டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் (Secondary School) நடந்த தாக்குதலில் சில மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை முதலானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், அந்தப் பழைய பள்ளி கட்டிடத்திற்கு மாணவர்கள் இனி ஒருபோதும் செல்லத் தேவையில்லை என, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி (David Eby) உறுதியளித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, அருகில் உள்ள ஆரம்பப் பள்ளி (Elementary School) மைதானத்தில் ‘போர்ட்டபிள்’ (Portable) எனப்படும் நடமாடும் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், மாணவர்கள் இழந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதற்காகப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
