பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறி நாட்டில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கல்வி, காவல்துறை மற்றும் அரசியல் அமைப்புகளின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என யோர்க் பல்கலைக்கழகத்தின் இஸ்லாபோபியா ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையானது நாட்டில் அனைத்து அரசாங்கங்களும் மே மாதம் 15 ஆம் திகதியை அதிகாரப்பூர்வமாக ”நக் பா” தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் சுதந்திரம் அறிவித்த நாளை பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தின் அழிவின் தொடக்கமாகக் கருதி, இந்த நாளை நினைவு கூர்கின்றனர்.
இந்த அறிக்கையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறியை, ஒரு தனித்துவமான மற்றும் தீங்கு விளைவிக்கும் இனவெறியின் வடிவமாக அங்கீகரிக்க வேண்டும் என்று,குறிப்பிடுகின்றது.
மேலும், அனைத்து மாகாண அரசுகளும் பாலஸ்தீனிய கலாசாரம், அடையாளம், மற்றும் நக் பா வரலாற்றை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
