இங்கிலாந்தில் இடம்பெற்ற “The Hundred” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் (Oval Invincibles) மற்றும் ட்ரென்ட் ரொக்கெட்ஸ் (Trent Rockets) அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் வில் ஜெக்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து 169 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ட்ரென்ட் ரொக்கெட்ஸ் அணி 100 பந்துகள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
