ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
டுபாயில் நடைபெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் தசுன் ஷானக்க 37 பந்துகளை எதிர்கொண்டு 64 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


