அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள புதிய பயணத் தடையானது , கனடிய இரட்டைக் குடியுரிமை கொண்ட சிலருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இனி அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என்பதால், இந்தத் தடையானது, கனடாவில் வாழும் பலரின் வழக்கமான பயணங்களையும், நிம்மதியையும் பாதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை இந்தத் தடை தொடர்பாக அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தனது நிர்வாகம் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துருக்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளின் பிரஜைகள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், உள்நுழைவுத் தடை கொண்ட நாடுகளின் குடியுரிமையுடன் கனடாவின் குடியுரிமையையும் கொண்ட நபர்களுக்கு அமெரிக்க நுழைவு என்பது சிக்கலானதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
