Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஜனவரி 8, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி இம்முறை குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு இடையில் 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும், படகு கட்டணம் ஒரு வழிக்கு 1200 ரூபாய் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன் போது, கடந்த வருடம் 9,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தியாவிருந்து 4364 பக்தர்கள் உள்ளடங்கலாக 7,464 பக்தர்கள் வரை கலந்துகொண்டார்கள்.

அதேபோன்று நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும் புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும்.

திருவிழாவுக்கு சகலரது ஒத்துழைப்பு பிரதானமானது இத் திருவிழா சிறப்புற நடைபெற அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட செயலர் தெரிவித்தார்.

தொடர்ந்து இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி – ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அதில் குறிப்பாக, இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள்

குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும்

அதேவேளை பக்தர்களுக்கு 28 ஆம் திகதி கச்சைதீவில் காலை உணவு இலவசமாக வழங்குவது.

கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும். போன்ற தீர்மானங்களும் எடுக்கபப்ட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே , இந்திய துணைத் தூதரக அதிகாரி இ. நாகராஜன் , நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு
அடுத்த செய்தி மன்னாரில் பல கோடி ருபாய் மோசடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

மே 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 19, 2026
இலங்கை

வவுனியா தவசிகுளத்தில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல்.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தோடு மோதும் பப்புவா நியூகினியா!

ஜூன் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?