இந்த வார ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்க கட்டணங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மனிடோபா அரசாங்கம் அறிவிக்கப்பட்ட எதிர் நடவடிக்கைகளைத் தொடரும் என்று முதல்வர் வாப் கினியூ தெரிவித்துள்ளார் , அந்த கட்டணங்களில் சில இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கான எரிசக்தி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களையும் மனிடோபா ஹைட்ரோ மறுபரிசீலனை செய்யும் என முதல்வர் வாப் கினியூ இன்று தெரிவித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கட்டணங்கள் நம் மீது தொடுங்கப்பட்டாலும் , கருவிப் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கருவியையும் நாம் பயன்படுத்த வேண்டும்,” என முதலவர் வாப் கினியூ செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களிடம்தெரிவித்தார்
அமெரிக்கா விதித்த சில கட்டணங்களை அமெரிக்கா மீண்டும் இடைநிறுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் முன்பு
மானிடோபா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், முதல்வர் கினியூ தற்போதைக்கு, மதுபான மார்ட்டின் அலமாரிகளில் இருக்கும் மீதமுள்ள அமெரிக்க மதுபானம் மற்றும் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக வரி ஒத்திவைப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்
கடந்த செவ்வாய்க்கிழமை இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 25 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருந்தார்
இன்று பிற்பகல் சில பொருட்களுக்கான வரிகள் ஏப்ரல் 2 வரை இடைநிறுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.