மொன்றியாலுக்கு அருகே சாடோகே வலியில் (Chateauguay Valley) அமைந்துள்ள செயிண்ட்-கிரிஸ்சோஸ்டோம் (Saint-Chrysostom) பகுதியில் நடந்த மோதலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு . ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் 30 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று, அருகிலுள்ள ஒர்ம்ஸ்டவுன் (Ormiston) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்தார் என தெரிவிக்கப்படும் அதேவேளை சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல குழுக்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
காயமடைந்த நிலையில் கைதான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் குணமடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.