கியூபெக் மாகாணத்தில் தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் நிரந்தர வதிவிட உரிமை (PR) வழங்க அரசு அறிவித்துள்ள புதிய சலுகை, ஒரு “கண் துடைப்பு” நடவடிக்கை என குடியேற்ற சட்ட வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ‘கியூபெக் அனுபவத் திட்டத்தில்’ (PEQ) இருந்து ஓரங்கட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எந்தப் பலனையும் அளிக்காது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குடியேற்ற விதிகள் சிக்கலாக்கப்பட்டதால், கியூபெக்கில் படித்துப் பணியாற்றிய திறமையான இளைஞர்கள், ஒன்ராறியோ போன்ற அண்டை மாகாணங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
இது கியூபெக் பொருளாதாரத்திற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கவும், கியூபெக் மாகாணத்தின் உடனடித் தேவைக்கு ஏற்றவாறு ஆட்களைத் தேர்வு செய்யவும் இந்த மாற்றங்கள் அவசியம் என கியூபெக் குடியேற்ற அமைச்சகம் (MIFI) தெரிவித்துள்ளது.
