Alberta மாகாணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாகாண அளவிலான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
முதல்வர் Danielle Smith தலைமையிலான Alberta அரசாங்கம், மாகாணத்தின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகளை வாக்காளர்களிடம் முன்வைக்கிறது.
அவற்றில் செனட் (Senate)-ஐ நீக்குவது, Alberta மாகாண நீதிபதிகள் நியமனத்தில் மாகாணத்தின் பங்கை அதிகரிப்பது, சில மத்திய அரசின் திட்டங்களில் இருந்து Alberta விலகினாலும் அதற்கான நிதியைத் தொடர அனுமதிப்பது போன்ற முன்மொழிவுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளில் Alberta சட்டங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் முன்மொழிவுகள் காணப்படுகின்றன.
இந்த முன்மொழிவுகளில் சில நடைமுறைக்கு வருவதற்கு கனடாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 7/50 விதி உள்ளிட்ட மத்திய மற்றும் மாகாண அளவிலான ஒப்புதல்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஏனைய மாகாணங்களின் முதல்வர்கள் இந்த முன்மொழிவுகள் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதில் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
