புகலிடம் கோரி அமெரிக்காவிலிருந்து கனேடிய எல்லைதாண்டி கியூபெக் மாகாணத்தினுள் நுழையும் ஏதிலிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக வதிவிட அனுமதி மீளப்பெறப்பட்டதையடுத்தே, கனடாவிற்குள் அவர்கள் நுழைய ஆரம்பித்துள்ளனர்.
மொன்றியல் நகரிற்கு தெற்குப் பகுதியில் உள்ள எல்லைப் பிராந்தியம் ஊடாகவே அதிக ஏதிலிகள், கனடாவிற்குள் நுழைகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையான காலப்பகுதியில், Saint-Bernard-de-Lacolle எனும் கனேடிய நுழைவுப் புள்ளியில், உள்நுழைந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைச் சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1,356 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களும் கடந்த சனிக்கிழமையன்று 557 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.