பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவிக் காலத்தின் இறுதி முழு நாளில் வெளியிடப்பட்ட காணொளியில் , ‘கனடியர்களைப் பற்றி பெருமைப்படுவதாக’ தெரிவித்துள்ளார்
பதவி விலகி வெளியேறும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை தனது பதவிக் காலத்தின் கடைசி முழு நாளைக் குறிக்கும் வகையில் கனடியர்களுக்கு பிரியாவிடை செய்தியை வெளியிட்டார்.
X தலத்தில் வெளியிடப்பட்ட 30 வினாடி காணொளியில் , சரியான சந்தர்ப்பத்தில் எதிர்த்து நிற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுந்து நிற்கும் மற்றும் “மிக முக்கியமான நேரங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்” மக்கள் நிறைந்த ஒரு நாட்டிற்கு சேவை செய்ததில் பெருமைப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் முறையான ராஜினாமாவுக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெறும் விழாவில் லிபரல் தலைவர் மார்க் கார்னி கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார்.
உலகம் கனடியர்கள் மீது எதை வீசினாலும், அவர்கள் “எப்போதும் ஒரே மாதிரியாக” கனேடியர்களாக இருக்க வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறார், அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும்போது தனது மொன்றியல் தேர்தல் தொகுதியில் மீண்டும் போட்டியிட போவதில்லை எனவும் ஜஸ்டின் Trudeau தெரிவித்துள்ளார்.