வரவு செலவுத் திட்டத்தை தற்போதைக்கு வெளியிடப்போவதில்லை என்ற லிபரல் கட்சி அரசாங்கத்தின் முடிவுக்கு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவேர் கவலை தெரிவித்துள்ளார். இது, நிதிநிலைமை குறித்து கனடியர்களை இருளில் வைத்திருப்பதற்கு ஒப்பானது என, அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக உறுதியளித்ததாகக் கூறிய பியர் பொலிவேர் , அந்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவானது, முதலீட்டாளர்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு மோசமான சமிக்ஞையை அனுப்புவதாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் கனடாவின் நிதிநிலைமை குறித்து, பொதுமக்களுக்கு எதையாவது மறைக்கிறதா என்ற கவலையையும் இது
ஏற்படுத்துவதாகவும் பியர் பொலிவேர் கூறியுள்ளார்.