Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அரசுப் பணத்தைச் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லூட்

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நுனாவுட் (Nunavut) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லூட் (Lori Lori Idlout), தனது சொந்த வணிக நிறுவனத்தில் பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கு அரசுப் பணத்தைச் செலவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சுமார் 1,756 டொலர் பணத்தை அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திருப்பிச் செலுத்தியுள்ளார்.

லோரி இட்லூட் ‘கார்விங்ஸ் நுனாவுட்’ (Carvings Nunavut) என்ற கலைப்பொருள் காட்சியகத்தின் உரிமையாளர் ஆவார்.

2025-ஆம் ஆண்டில் நான்கு முறை தனது சொந்தக் கடையிலிருந்தே கலைப்பொருட்களை வாங்கி, அதற்கான செலவை நாடாளுமன்றக் கணக்கில் (Expenses) அவர் காட்டியுள்ளார்.

“அரசு ரீதியான பரிசுகள்” என்ற பெயரில் இந்தப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியைப் பயன்படுத்தி சொந்த வியாபாரத்தில் லாபம் ஈட்டுவது சட்டப்படித் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவர் என்.டி.பி (NDP) கட்சியிலிருந்து விலகி, பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையிலேயே, அரசுப் பணத்தை தவறாகச் செலவிட்டமை குறித்த இந்த சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி ’24 சசெக்ஸ் டிரைவ்’ கட்டிடம் தொடர்பிலான முடிவில் காலதாமதம்
அடுத்த செய்தி பாடசாலையில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
கனடாவிசேட செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், 16 வயது சிறுவன் பலி!

ஏப்ரல் 22, 2025
கனடாவிசேட செய்திகள்

உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?