யாழ் – வடமாராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை இன்று (9)சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் வியூகங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிந்தனைகளும், நிலைப்பாடுகளும் பிழைத்தது கிடையாது என்பதை நீண்ட கால வரலாறு உறுதிப்படுத்தி வருகின்றதெனவும்,
அவை சரியான முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் அவர்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.