அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கையின் நகலைத் தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் தமது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது உலகப் பொருளாதார மற்றும் அரசியல் களத்தில் ஒரு “திருப்புமுனை” என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெறும் ஜி7 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க ஊடகமொன்றுக்கு, பிரதமர் மார்க் கார்னி பிரத்யேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
அந்த நேர்காணலில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இலத்திரனியல் முறையில் கையெழுத்தாகியுள்ள தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) தாம் பார்வையிட்டதாக, பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய கிழக்கில் இருதரப்பு இராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கையை எட்ட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை தமது எதிர்பார்ப்புகளை விடவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் மார்க் கார்னி பாராட்டியுள்ளார்.


