Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

ஜூன் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டது.

அதன் போது காரைநகர் ஊர்காவற்றுறை இடையில் மேம்பால கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

காரைநகர் மற்றும் ஊர்காவற்துறைக்கு இடையில் தற்போது கடல்பாதை சேவையில் ஈடுபட்டு வருகிறது. அது பல தடவைகள் பழுதடைவதனால், இரு தீவுகளுக்கும் இடையில் பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக காரைநகர் பகுதிக்கான பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை ஊர்காவற்துறையில் காணப்படுகிறது.

அத்துடன் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை இடையில் அரச உத்தியோகஸ்தர்களும் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடல் பாதை பழுதடைந்து சேவையில் ஈடுபடாது விடின் சுமார் 60 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே வீதி வழியாக பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

இதனால் காரைநகர் – ஊர்காவற்துறை இடையில் மேம்பாலம் கட்டி போக்குவரத்தை இலகு படுத்துமாறு நீண்ட காலமாக இரு பிரதேச மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் இரு தீவுகளுக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ள நிலையில் , அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எழுவைதீவு இறங்குதுறையை ஆழப்படுத்துவது, கடற்படை வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது, எழுவைதீவு மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

முந்தைய செய்தி அமெரிக்கா ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

போதை வியாபாரியின் வாக்கு மூலத்தில் இளைஞன் கைது

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தில் மின்சாரம் எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேரிடரால் 1,054 மதத் ஸ்தலங்கள் சேதம்!

டிசம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாக விகாரை விகாரதிபதியை சந்தித்த ஜனாதிபதி

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?