கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழிச் சட்டமான ‘பில் 101’ (Bill 101) அமுற்படுத்தப்படுவதனால், சுமார் 27,000 மாணவர்கள் ஆங்கில மொழிமூலப் பாடத்திட்டத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பெரியவர்களுக்கான கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இந்தச் சட்டம் அமுற்படுத்தப்படவுள்ளது.
கியூபெக் சட்டமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது, பிரெஞ்சு மொழித் துறை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge) இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையிலேயே, ஆங்கில மொழிமூலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் 27,000 மாணவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, திடீரென 27,000 மாணவர்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குப் பிரெஞ்சு மொழிப் பள்ளிகளிடம் போதிய ஆசிரியர்களோ அல்லது வசதிகளோ இல்லை என்ற பிரச்சினையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் ஆங்கிலக் கல்வி வாரியத்தின் (EMSB) தலைவர் ஜோ ஓர்டோனா (Joe Ortona) இந்தப் பிரச்சினையை, வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
