கியூபெக் மாகாணத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) கட்சியினரை மத்திய அரசு உளவு பார்ப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பில், கியூபெக் மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) கருத்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) கட்சியினரின் இந்த அச்சம் “முற்றிலும் நியாயமானது” என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், கியூபெக்கின் எதிர்காலம் குறித்த முக்கியமான அரசியல் முடிவுகள் மேற்கொள்ளப்படும்போது, நாட்டின் மத்திய அரசு விதிகளை மீறிச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, கியூபெக் மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) தெரிவித்தார்.
எனவே, கியூபெக் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) வெளிக்காட்டும் இந்த எச்சரிக்கை உணர்வு அவசியமானதுதான்,” என்று, கியூபெக் மாகாண நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, கியூபெக் மாகாணப் பொது பாதுகாப்பு அமைச்சர் இயன் லாஃப்ரெனியர், இந்த உளவுப் புகாரைத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த பொது வாக்கெடுப்புக்காக (Referendum) மக்களைத் தயார் செய்ய ‘பார்ட்டி கியூபெக்வா‘ கட்சி கையாளும் ஒரு அரசியல் தந்திரமே இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
