Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரிய சோனா லக்கோயன் ஆலிவர்

மே 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசியல் ஆதாயத்திற்காக அரசு நிதியையும் அலுவலகத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சோனா லக்கோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), கியூபெக் சட்டமன்றத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் நெறிமுறை ஆணையர் (Ethics Commissioner) அரியான் மிக்னோலெட் அண்மையில் வெளியிட்ட விசாரணை அறிக்கையில், சோனா லக்கோயன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

2025-ஆம் ஆண்டு லிபரல் கட்சித் தலைமைப் போட்டியின் போது, அரசு ஊதியம் பெறும் தனது ஊழியர்களைக் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கு, அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் தனது தொகுதிக்கான அலுவலகத்தை, சோனா லக்கோயன் ஆலிவர் தனது கட்சிப் பிரச்சார மையமாக  மாற்றியமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தவறுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு 8,000 டொலர் அபராதம் விதிப்பதற்கு கியூபெக் மாகாணத்தின் நெறிமுறை ஆணையர் பரிந்துரைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்துக்கான லிபரல் கட்சித் தலைவர் சார்லஸ் மில்லியார்ட், தங்கள் தரப்பு சட்டமன்ற உறுப்பினராக உள்ள சோனா லக்கோயன் ஆலிவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, சட்டமன்ற உறுப்பினர் சோனா லக்கோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), கியூபெக் சட்டமன்றத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கியூபெக் சட்டமன்றத்தில் சோனா லக்கோயன் ஆலிவர் அழுதபடி மன்னிப்பு கேட்டபோதும், கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பார்ட்டி கியூபெக்வா கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் சைமன் ஜோலின்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் நலிவடைந்து வரும் சுயாதீன இசைத்துறை

ஜூன் 1, 2026
கியூபெக்

செயிண்ட் மிஷேல் பகுதியில் வன்முறைத் தாக்குதல் – இருவர் படுகாயம்

ஆகஸ்ட் 14, 2026
கியூபெக்

பிரதமர் மார்க் கார்னிக்கு பின்னடைவு

பிப்ரவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா–இந்தியா உறவில் மீண்டும் பதற்றம்: பிரதமரின் பதிலால் சர்ச்சை!

மார்ச் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?