கியூபெக் மாகாணத்தின் மக்கள் தொகை வளர்ச்சியானது, கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெருமளவு குறைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் புள்ளியியல் நிறுவனம் (ISQ) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் வெளிநாட்டினரின் வருகை குறைவடைந்தமை மற்றும் பிறப்பு விகிதத்தின் வரலாறு காணாத வீழ்ச்சி முதலானவையே, இந்த மாற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கியூபெக்கின் மக்கள் தொகை சுமார் 9.11 மில்லியனை எட்டியிருந்தது.
2023-ஆம் ஆண்டில் கியூபெக்கின் மக்கள் தொகையில், சுமார் 2 லட்சம் பேர் அதிகரித்த நிலையில், தற்போது அந்த வேகம் பாதியாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, மொன்றியல் நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.4 சதவீதத்திலிருந்து வெறும் 0.3 சதவீதமாக அதிரடியாகச் சரிந்துள்ளது.
தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதால், கியூபெக் மாகாணத்தில் வெளிநாட்டுமக்கள் புலம்பெயர்ந்து வருவது குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
