நாட்டின் மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல், ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவு அமுலுக்கு வரவுள்ளது.
எனினும், இவ்வளவு ஊழியர்களுக்கும் போதுமான மேசைகள் மற்றும் அமரும் வசதிகள் (Workstations) அலுவலகங்களில் இல்லை என்பதைத் தற்போது மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகம் வந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, ஊழியர்களுக்கான இந்த புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசில் பணிபுரியும் மேலாளர்கள் (executives) அனைவரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 5 நாட்களும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

