Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளியான ஜீன்-பிரான்சுவா மாலோ (Jean-François Malo), கரீபியன் கடலில் உள்ள பிரெஞ்சு தீவான மார்டினிக்கில் (Martinique) நேற்று கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் ஒருவரைக் கொல்ல முயற்சி செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த அக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக இருந்தார்.

கனடா காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்தது.

இந்த நிலையில், மார்டினிக் தீவில் இவர் செய்த வேறொரு குற்றத்திற்காக, பிரெஞ்சு தீவான மார்டினிக்கின் போலீசாரால் தற்போது சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.

2020-ஆம் ஆண்டில், கியூபெக் மாகாணத்தில் தனக்கு எதிராகச் சிவில் வழக்கை நடத்திய தேஜார்டின்ஸ் (Desjardins) வங்கி வழக்கறிஞர் நிக்கோலஸ் டாடெலினைத் கொலைசெய்வதற்காக இரண்டு கூலிப்படையினரை, ஜீன்-பிரான்சுவா மாலோ (Jean-François Malo) ஏவியிருந்தார்.

அந்த வழக்கறிஞரின் வீட்டிற்குள் புகுந்த கூலிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வழக்கறிஞரின் காலில் பலத்த காயம் ஏற்பட்ட போதும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் கடந்த மே மாதம் மாலோவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

சிறைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், மாலோ நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதில் தனது “உயிருக்கு ஆபத்து” இருப்பதாகக் கூறியதுடன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதனால் இவர் மீது ’கனடா முழுவதுமான தேடுதல் ஆணை (Canada-wide warrant)’ பிறப்பிக்கப்பட்டது.

தற்போது மார்டினிக் போலீசாரின் பிடியில் உள்ள மாலோவை, கனடாவிற்கு நாடு கடத்த (Extradition) கியூபெக் போலீசார் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி ஏதிலிகள்
அடுத்த செய்தி கிரீன் கட்சி நீக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு சுமூகமான சமரசம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுகிறார்-கனடாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஜூலை 22, 2025
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘Fierté Montréal’ அமைப்பு

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?