இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவருவதால் பணயக்கைதிகளின் விடுதலை தாமதமாகலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, காசாவுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து நிறுத்தி வருவதால், ஹமாஸ் தரப்பு பணயகைதிகளை ஒப்படைக்க தாமதம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவ உதவிக்கான வாகனங்கள் 12,000 காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 8500தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தினமும் 50 பெட்ரோல், டீசல் டேங்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 15 என்கிற எண்ணிக்கையில்தான் இவை அனுமதிக்கப்படுகின்றன. தற்காலிக வீடுகள் 60,0000 உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றுகூட அமைக்கப்படவில்லை. குடிசைகள் 2 லட்சம் தேவை. ஆனால் வெறும் 20,000 மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆக இவற்றையெல்லாம் ஏன இஸ்ரேல் அனுமதிக்கவில்லை? இப்படி செய்வதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என ஹமாஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் மறுபுறம் இஸ்ரேல் வேறு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதாவது 2ம் கட்ட போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் எனில், ஹமாஸ் தலைவர்கள் காசாவை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும்.ஆல் -கிஸம் பாலம் எனும் அமைப்பை கலைக்க வேண்டும், இஸ்ரேலின் மீதமிருக்கும் 76 பிணைய கைதிகளை விடுவிக்க உத்தரவாதம் தர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.