வணிக ரீதியிலான விமானி Commercial Pilot போல நடித்து, பலமுறை இலவசமாக விமானப் பயணம் செய்த 19 வயது இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த லியாம் பிரென்னன் என்ற 19 வயது இளைஞர், கடந்த சில மாதங்களாகத் தன்னை ஒரு விமானி என்று அடையாளப்படுத்திக் கொண்டு டொராண்டோ, வான்கூவர் மற்றும் மொண்ட்ரியல் ஆகிய நகரங்களுக்கு இடையே, ஆறு முறை இலவசமாகப் பயணம் செய்துள்ளார்.
லியாம் மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட விமானி சீருடை மற்றும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
வழக்கமாகப் பணி முடிந்து திரும்பும் விமானிகள் (Deadheading) வெறுமையாக உள்ள இருக்கைகளில் இலவசமாகப் பயணம் செய்யும் முறையைப் பயன்படுத்தி, இவர் விமானச்சீட்டுக் கருமபீடங்களைத் தவிர்த்து நேரடியாக விமானத்திற்குள் நுழைந்துள்ளார்.
டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் சர்வதேச விமானம் ஒன்றில் ஏற முயன்றபோது, அங்கிருந்த ஊழியர் ஒருவருக்கு இவரது வயது மற்றும் பேச்சுவார்த்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்தே அவர் மீதான கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


