Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கருப்பு ஜூலையின் 43வது ஆண்டை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை.

ஜூலை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கருப்பு ஜூலையின் 43வது ஆண்டை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கைஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…..

இன்று நாம் கருப்பு ஜூலையை நினைவுகூர்கிறோம்.

இலங்கையில் கொடூரமான 1983 கருப்பு ஜூலை இனவன்முறைக்கு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அப்போது தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், எண்ணற்ற வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த வன்முறை, தமிழர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது.

இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற வன்முறை எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், இதுவரை அதற்குப் பொறுப்பானவர்கள் எவரும் முழுமையாக நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

கருப்பு ஜூலைக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் கனடா அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 1,800-க்கும் மேற்பட்ட தமிழர்களை கனடாவிற்கு வரவேற்றது. அந்தக் காலத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்று ஸ்கார்பரோ—கில்ட்வுட்—ரூஜ் பார்க் தொகுதியிலும், கனடா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்-கனடியர்கள் தொழில்களை உருவாக்கி, குடும்பங்களை வளர்த்து, தங்கள் சமூகங்களையும் கனடா நாட்டையும் வளப்படுத்தியுள்ளனர்.

இன்று, பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதோடு, அந்த வரலாற்றின் பாரத்தை நாள்தோறும் சுமந்தபடி வாழ்ந்து வரும் உயிர் தப்பியவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

2023 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது. மேலும், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கனடா தொடர்ந்து முன்னணி பங்கை வகித்து வருகிறது.

கருப்பு ஜூலை ஒருபோதும் மறக்கப்படக் கூடாது. அது மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது. எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை அதிகாரி உட்பட மூவர் உயிரிழப்பு

ஜூன் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகரிற்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

ஜனவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தேர்தல் பிரசாரம் தீவிரம்: CAQ தலைவர் கிறிஸ்டின் பிரெஷெட் மக்கள் சந்திப்பு

ஆகஸ்ட் 31, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சர்வதேச மோசடி வழக்கில் சிக்கியுள்ள கிளின் கிராஸ்லி

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?