மொன்ட்ரியல் நகரம் மற்றும் தெற்கு கியூபெக் பகுதிகளில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தற்போது சுமார் 20 சென்டிமீட்டர் வரையிலான கடும் பனிப்பொழிவு (Snowfall) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரம் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வரும் நிலையில், இந்த புதிய பனிப்புயல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் துறை இன்று விடுத்துள்ள அறிவிப்பின் படி, மொன்ட்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 15 முதல் 25 சென்டிமீட்டர் வரை பனி பொழிய வாய்ப்புள்ளது.
பனியுடன் பலத்த காற்றும் வீசுவதால் சாலைகளில் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் மொன்ட்ரியல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
