அமெரிக்காவில் டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கான ஒரு சட்டத்தை கடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் ஜோ பைடன் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்தது.
இதன் காரணமாக டிக்டொக் செயலியின் சேவையை நிறுத்துவது குறித்து
அறிவித்திருந்த நிலையில் ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டொக் நீக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட டிக் டொக் செயலியானது மீண்டும் அமெரிக்காவில் செயல்பட தொடங்கியுள்ளது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்திருந்ததுடன் மீண்டும் தனது சேவையைத் ஆரம்பிக்கவுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.