உலகில் ஒரு சில நாட்டில் உள்ள இருதரப்பினர்களுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சூடானில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.
இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை இராணுவத்தினர் போராடி வருகின்றனர். இதனால் சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் உள்நாட்டு கலவரமாக மாறியுள்ளது.
இதன்படி கடந்த 16ஆம் திகதி சூடானின் தலைநகர் கார்டூம் அருகே மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை இராணுவப்படை வீரர்கள் ட்ரோன்கள் ( Drone) வீசித் தாக்குதல் நடத்தினர்.
குறித்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் நீர்மின் நிலையம் கடும் சேதத்திற்குள்ளானது. நீர்மின் நிலையத்தின் மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு மின்சாரம் உற்பத்தி பணி பாதிப்புக்குள்ளாகி மின்தடை ஏற்பட்டுள்ளது.
தற்போது சூடானின் தலைநகரிலுள்ள வீடுகள், கல்வி நிலையங்கள், அரசஅலுவலகங்கள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன. நீர்மின் நிலையத்தைச் சீரமைக்கும் பணியில் அந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.