இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர். என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டுப் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர், 2 படகுகளில் இந்தியப் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.