Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுகிறார்-கனடாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஜூலை 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்த கருத்துக்கு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான பயணம் மற்றும் அமெரிக்க மதுபானங்களைப் பயன்படுத்தல் முதலானவற்றை கனேடிய மக்கள் அண்மைக்காலமாக புறக்கணித்து வருகின்றனர்.

இந்த புறக்கணிப்புச் செயற்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனேடிய மக்களை “மோசமானவர்கள்” என்று கருதுவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கருத்து வெளியிட்டிருந்தார்.

வொஷிங்டனில் நடைபெற்ற வருடாந்திர பசிபிக் வடமேற்கு பொருளாதார பிராந்திய அறக்கட்டளை உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே, இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் வெளியிட்டார்.

இந்த கருத்து வெளிப்பாடு குறித்தே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“கனடாவை 51வது மாநிலமாக மாற்றி, அமெரிக்காவுக்கு அடிபணியாவிட்டால், பொருளாதார ரீதியாக அவர்களை அச்சுறுத்த விரும்புகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறும்போது, கனடியர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களா?” என்ற கேள்வியை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி எழுப்பியுள்ளார்.

மேலும் “கனடியர்கள் வெளிப்படையாகவே சீற்றமடைந்துள்ளனர்,” என்றும் டேவிட் எபி தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் கனடாவின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல கனேடிய மாகாண அரசுகள், தாம் நடத்தும் கடைகளில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனையைத் தடை செய்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி இன்றைய பிரதான செய்திகள்!(video )
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
கனடா

உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கார்னி

ஜனவரி 20, 2026
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்க குடியுரிமைக்கான ‘ தங்க அட்டை ‘ திட்டம் – டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

பிப்ரவரி 26, 2025
கனடா

சார்லி ஆங்கஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?