ஃபிரான்டனாக் பிரதேசத்தின் அவசர மருத்துவ சேவை (Frontenac Paramedics) ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இதனால், சில சமயங்களில் புதிய பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்க வாடகைக்கு எடுக்கப்பட்ட சரக்கு லொரிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடுமையான சூழல் குறித்து ஃபிரான்டனாக் அவசர மருத்துவ சேவைத் தலைவர் மார்க் கூடி (Mark Goudie) ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
அதற்குப் பிறகு, ஃபிரான்டனாக் கவுண்டி கவுன்சில் இரண்டு பழைய ஆம்புலன்ஸ்களை அவற்றின் வழக்கமான சேவை காலத்திற்கு மேலதிகமாக, பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல், இப்பிரதேசத்தில் புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்குவதற்கும், வாங்கிய பின்னர் அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதற்கும் இடையிலான கால அவகாசம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஆம்புலன்ஸ் வாகனங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
