அமெரிக்க வரிவிதிப்பையும் அந்த நாட்டு ஜனாதிபதியையும் கனேடியப் பிரதமர் Mark Carney தமது தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre விமர்சித்துள்ளார்.
கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்க வரிவிதிப்புகளைத் தடுக்கவோ தவிர்க்கவோ, Mark Carney ஆல் முடியவில்லை என, Pierre Poilievre தெரிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பிலிருந்து பல நாடுகள் ஒருவாறு விலகிக் கொண்டுள்ள போதும், Mark Carney ஆல் நடத்தப்படும் கனேடிய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாமல் போனவையை, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக ரீதியில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான இருதரப்பு உறவுகளை கனேடியப் பிரதமர் Mark Carney சரிவர கையாளவில்லை என்பதையும் Pierre Poilievre கூறியுள்ளார்.
