ஒன்ராறியோவின் பரவி வரும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 90 சதவீதமானோர் அந்த மாகாணத்தின் தென்மேற்குப் பிராந்தியத்தில் வசிப்பதாகத் தெரியவருகின்றது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இன்ரு வரையான காலப்பகுதியில், ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் 816க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோ மாகாணத்தின் பொது சுகாதாரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் நியூ பிரன்சுவிக்கில் நடந்த ஒரு திருமணத்திற்கான ஒன்றுகூடலிலிருந்தே பரவ ஆரம்பித்துள்ளது.
இதன் விளைவாக, கனடாவில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் காணப்படாத அளவு, பாரிய தட்டம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
