ஒன்ராறியோ மாகாணத்தில் கார் திருட்டு மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் (Home Invasion) மற்றும் சந்தேக நபர்களைக் கண்காணித்தல் ஆகிய “குற்றச் செயல்களுக்கான கேமராக்களை” (Cameras on Crime) நிறுவும் யோசனையை, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வேகக் கேமராக்களைத் தடை செய்யப் போவதாக, முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்திருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வேகக் கேமராக்கள் ஒரு ‘பண வேட்டை’ என, முன்னரே டக் ஃபோர்ட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அந்த கேமராக்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதாகக் காட்டும் ஆய்வுகள் மற்றும் தரவுகளை அவர் ஏற்கவில்லை.
மேலும், அடுத்த மாதம் முதல் ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் வேகக் கேமராக்களின் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான சட்டத்தை தனது அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
