கியூபெக் மாகாண மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஊதியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலையில் விசேட சட்டத்தை (Special Law) நடைமுறைப்படுத்துவோம் என்று கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ (François Legault) கடுமையாக எச்சரித்துள்ளார்.
மருத்துவர்களின் சம்பளத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவும், மருத்துவப் பயிற்சி நடவடிக்கைகளைத் தடை செய்துள்ள அழுத்தங்களை (Pressure Tactics) உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.
மருத்துவர்களின் ஊதியத்தில் 15 சதவீதத்தினை அவர்களின் செயல்திறன் இலக்குகளுடன் இணைக்கும் திட்டத்தை, அரசாங்கத்தின் 106ஆம் இலக்க மசோதா கொண்டிருக்கின்றது.
இந்த திட்டத்தினை மருத்துவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ , தாம் மருத்துவர்களுக்கு எதிராகச் செயல்படவில்லை எனவும் மாறாக “கியூபெக் மக்களுக்காகவே” இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
